உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மும்பை விநாயகர் சிலைகள் ரயிலில் புதுச்சேரி வருகை

மும்பை விநாயகர் சிலைகள் ரயிலில் புதுச்சேரி வருகை

புதுச்சேரி : மும்பையில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு விநாயகர் சிலைகள் நேற்று வந்தன. ஆக., 27ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தயாரிக்கப்பட்ட சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதேபோல் புதுச்சேரி லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகர் மற்றும் கடலுார் பகுதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு வடிவங்களில் 7 அடி உயரமுள்ள 3 சிலைகள் மற்றும் ஜெயின் சமுகத்தினர் வீடுகளில் பிரதிஷ்டை செய்வதற்காக ஒன்றரை அடி உயரமுள்ள 26 சிலைகள் மும்பையில் தயார் செய்யப்பட்டு, தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு நேற்று காலை வந்தது. ரயில் நிலையத்திற்கு வந்த சிலைகளை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி