மேலும் செய்திகள்
புத்தேரி விநாயகருக்கு சதுர்த்தி வழிபாடு
19-Jan-2025
வில்லியனுார்: வில்லியனுார் அருகே முத்துப்பிள்ளைபாளையம் பொன்னி முத்துமாரியம்மன் கோவில் மற்றும் அதனுடன் அமைந்துள்ள முத்துவிநாயகர், அழகு முத்து ஐயனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.பூஜைகள் கடந்த 8ம் தேதி துவங்கி நடந்து வந்தது. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து, 9:00 மணியளவில் கலசம் புறப்பாடும், 9:30 மணியளவில் புதிய ராஜகோபுரம்கும்பாபிஷேகம், 9:45 மணியளவில் முத்துவிநாயகர் உள்ளிட்ட பரிவார ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம், 10:10 மணியளவில் பொன்னிமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம், தீபராதனை நடந்தது.விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, சிவசங்கரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், பா.ஜ. மாநில செயலாளர் சரவணன், என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
19-Jan-2025