உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காமராஜரை அவதுாறாக பேசியதை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்

 காமராஜரை அவதுாறாக பேசியதை கண்டித்து நாடார் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: காமராஜர் மற்றும் நாடார் சமுதாயம் குறித்து அவதுாறாக பேசிய யூடியூபர் முக்தார் அகமதுவை கண்டித்தும், அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி அனைத்து நாடார் சங்கம் சார்பில், நேற்று சுதேசி மில் அருகில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மதுரை நாடார் மகாஜன சங்க செயலாளர் அவனி மாடசாமி சிறப்புரையாற்றினார். பொதுச்செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் பழனிவேல், சங்க நிர்வாகிகள் பால்ராஜ், தங்கமணி, அனைத்து நாடார் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் பவர் சோப் உரிமையாளர் தனபால், செண்பகா ஓட்டல் பாஸ்கரன், அண்ணாமலை ஓட்டல் ஜெயகணேஷ் மற்றும் நாடார் சமுதாய மக்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை