மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
20 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
20 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
20 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
20 hour(s) ago
புதுச்சேரி : தனது சொத்தை காப்பாற்றி கொள்ள நமச்சிவாயம் பா.ஜ.,வில் சேர்ந்தார், என்னை சீண்டினால் விடமாட்டேன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் கூறியதாவது;சட்டசபை கட்டும் கோப்பு கவர்னர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளதாக சபாநாயகர் குற்றம்சாட்டுவது, ஆட்சியாளர்களுக்கும், கவர்னருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.வைத்திலிங்கம் எம்.பி., புதுச்சேரி சட்டசபை கட்டுவதற்கான கோப்பு குறித்து லோக்சபாவில் கேள்விகேட்டபோது , உள்துறை அமைச்சகத்தில் கோப்பு இல்லை என பதில் கூறப்பட்டது. தற்போதுள்ள சட்டசபை, அருகில் இருக்கும் கட்டடத்தை இணைத்து சிறப்பாகன சட்டசபை கட்டடம் கட்டலாம். ஆட்சியாளர்களும், கவர்னரும் ஒப்பந்தம் போட்டு கொண்டு வெளியில் வேஷம் போடுகின்றனர்.கலால் துறையில் மொத்த விற்பனை உரிம தொகை ரூ. 22 லட்சம் கட்டி புதுப்பிக்க வேண்டும். ஆனால், ரூ. 40 லட்சமாக உயர்த்த உள்ளதாக கூறி, ரூ. 25 கோடி பேரம் பேசினர். இதில், முதற்கட்டமாக மொத்த விற்பனையாளர்களிடமிருந்து ரூ. 10 கோடி கைமாறி உள்ளது. இன்னும் ரூ. 15 கோடி தர வேண்டும். சில்லரை விற்பனையாளர்கள், ரெஸ்ட்டோ பார்களிடம் பேரம் பேசப்பட்டு வருகிறது. இப்படி மக்களை பற்றி கவலைப்படாமல், முதல்வர், அமைச்சர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.நமச்சிவாயம் காங்., அமைச்சராக இருந்தபோது, ஒரு கோப்பு கூட நான் நிறுத்தவில்லை. அவரது நிர்வாகத்திலும் தலையிட வில்லை. பா.ஜ.,வில் சேர்ந்த பிறகு பொய் தகவல் கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும்போது நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடராதது ஏன். தனது சொத்தை காப்பாற்றி கொள்ள பா.ஜ.,வில் நமச்சிவாயம் சேர்ந்தார். என்னை சீண்டினால் விடமாட்டேன் என கூறினார்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago