மேலும் செய்திகள்
லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமபாராயணம்
16-May-2025
புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீலட்சுமி விஷ்ணு சஹஸ்ரநாம மண்டலி சார்பில், 19ம் ஆண்டு விஷ்ணு சஹஸ்ர நாம ஜப யஜ்ஞம் (நாம பாராயணம்) மற்றும் உபன்யாசம் சித்தன் குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது.மண்டலி தலைவர் ராஜாராம தேசிய தாசன் வரவேற்றார். செயலாளர் முத்தியால் ராமானுஜ தாசன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் வாழ்த்தி பேசினார்.தொடர்ந்து நடந்த உபன்யாசத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் பெருந்தேவி, எங்கும் உளன் கண்ணன் என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார்.விஷ்ணு சஹஸ்ர நாம ஜப யஜ்ஞத்தை (நாம பாராயணம்) திருவந்திபுரம் ஸ்ரீநிவாச சுவாமிகள் துவக்கி வைத்தார். தொடர்ந்து நாம பாராயணம் நடந்தது. நாமாவளி, லட்சுமி அஷ்டோத்தரம், சாற்றுமறை, மக்கள ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ஆவார்த்தியாகஇந்த சஹஸ்ர நாம பாராயணம்காலை 5:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் துளசி, புஷ்பத்துடன் கலந்து கொண்டனர். ஊர்வலம்
முன்னதாக குயவர்பாளையம் ஆனந்தரங்கப்பிள்ளை தோட்டம் நவனீத கிருஷ்ணன் கோவிலில் சுப்ரபாதம் சேவித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜெயராம் திருமண்டபத்தினை அடைந்தனர். இதில் வைத்திக்குப்பம் சத்தியமூர்த்தி சுவாமிகள் குழுவினரின் நாம சங்கீர்த்தன பஜனை, நாமாவளி மேள தாளத்துடன் பங்கேற்றனர்.மண்டலி சார்பில் துணை தலைவர் ஜெயக்குமார், பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
16-May-2025