உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் பயிற்சி

தேசிய மாணவர் படை துப்பாக்கி சுடும் பயிற்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் தேசிய மாணவர் படைக்கான 10 நாள் சிறப்பு முகாமில், துப்பாக்கி சூடுதல் பயிற்சி நடந்தது.லாஸ்பேட்டையில் உள்ள தேசிய மாணவர் தலைமை உத்தரவின் பேரில், என்.சி.சி., வருடாந்திர முதுநிலை மற்றும் இளநிலை தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான 10 நாள் சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, காமராஜர் கலைக்கல்லுாரியின் லெட்டினன்ட் கதிர்வேல் வரவேற்றார். தலைமை ராணுவ அதிகாரி மோகன்தி தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார்.இதில், 7 அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். முகாமில், தலைமை பண்பு, துப்பாக்கி சூடுதல், பேரிடர் மேலாண்மை, அவசரகால முதலுதவி, சுத்தம் சுகாதாரம், சுய ஒழுக்கம், கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இளநிலை ராணுவ அதிகாரி நாயுடு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை