மேலும் செய்திகள்
மருத்துவ கருத்தரங்கு
28-Jun-2025
புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் நடந்த, தேசிய மருத்துவர் தினத்தில், பெண் மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தேசிய மருத்துவர்கள் தினம், இந்திரகாந்தி அரசு மருத்துவமனையில், நேற்று கொண்டாடப்பட்டது. மருத்துவக் கண்காணிப்பாளர் செல்வேள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பீச் டவுன் ரோட்டரி சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பெண்களுக்கு முன்னுரிமை தரும் வகையில், சீனியர் பெண் மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறை தீர்ப்பு அதிகாரி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
28-Jun-2025