உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய மனநலத்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய மனநலத்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: தேசிய மனநலத்திட்டத்தின் சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு தேசிய மனநலத்திட்டத்தின் சார்பில் சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு குறும்படப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழாவில் தேசிய மனநலத்திட்ட அதிகாரி பாலன் பொன்மணி ஸ்டீபன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் பரிசு வழங்கி பாராட்டினார். அரசு மருத்துவக்கல்லுாரி மனநலத் துறை டாக்டர்கள் மதன், அரவிந்தன்  மன அழுத்தம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றால் உருவாகக்கூடிய தற்கொலை எண்ணங்களை தடுக்கும் முறைகள் குறித்து பேசினர். ஏற்பாடுகளை டாக்டர் ராஜா, பொன்னி மற்றும் மனநலப் பணியாளர் வெற்றிக்கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர். மனநல ஆலோசகர் டாக்டர் ராஜா நன்றி கூறினார்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை