மேலும் செய்திகள்
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., பயிலரங்கம்
07-Feb-2026
புதுச்சேரி: ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவன புதுமை கவுன்சில் சார்பில், 'எதிர்கால தொழில்நுட்ப பொறியாளர்களுக்கான மல்டி-கிளவுட் உத்திகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். சாப்ட்ரேட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனர் பாலாஜி ராஜேந்திரன் கலந்து கொண்டுகிளவுட் கணினி தொழில்நுட்பம் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மற்றும் வணிக விரிவாக்கத்தில் வகிக்கும் முக்கிய பங்குகள் குறித்தும், அமேசான் கிளவுட் சேவைகள், மைக்ரோசாப்ட் அஸ்யூர் மற்றும் கூகுள் கிளவுட் போன்ற கிளவுட் தளங்களின் தாக்கத்தை எடுத்துரைத்தார். கருத்தரங்கில்,கல்லுாரியின் தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், டிரஸ்டி சிந்து, டீன் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லுாரியின் தொழில்முறை அமைப்புகளின் தலைவர் சோனியா ஜாஸ், ஐ.ஐ.சி., ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், ஐ.எஸ்.டி.இ., பேராசிரியர் அருணாகுமாரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
07-Feb-2026