மேலும் செய்திகள்
தமிழ் காப்புக் கருத்தரங்கம்
14-Jul-2025
பாகூர் : பிள்ளையார்குப்பம் கஸ்துாரிபா காந்தி செவிலியர் கல்லுாரியில், 13வது தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லுாரியில் 'நிலையான வளர்ச்சி இலக்குகள், அனைவருக்கும் சுகாதாரத்தை நோக்கி முன்னேறும் செவிலியர்கள் 2030' என்ற தலைப்பில் 13வது தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் புனிதா ஜோசபின் வரவேற்றார். துணை முதல்வர் சுமதி நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் நிகார் ரஞ்சன் பிஸ்வாஸ் பங்கேற்று, கருத்தரங்கை துவக்கி வைத்து, '2030க்குள் அனைவருக்கும் சமமான சுகாதாரத்தை உறுதி செய்வதன் செவிலியர்களின் பங்கு குறித்து பேசினார்.டீன் அசோக்குமார் தாஸ் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் கமலவேணி 'கல்வி பாலின சமத்துவம் மற்றும் சுகாதார விளைவுகளுக்கு இடையேயான முக்கிய நிகழ்வுகள் குறித்து பேசினார். மேற்பார்வையாளராக சத்தியபாமா கலந்து கொண்டார். கருத்தரங்கில், நாடு முழுதும் உள்ள கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவிலியர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர் கீதா நன்றி கூறினார்.
14-Jul-2025