உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட கருத்தரங்கம் 

தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட கருத்தரங்கம் 

புதுச்சேரி: புதுச்சேரி அரசு நலவழித்துறையின் மார்பக நோய் பிரிவு, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட கருத்தரங்கம் நடந்தது.அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த கருத்தரங்கில் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மருந்தாய்வாளர்கள், மருந்து வணிகர்கள் சங்கத்தின் மொத்த மற்றும் சில்லறை மருந்து வணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திட்ட அதிகாரி சந்திரசேகர், காசநோய் சம்பந்தமான விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் மருந்து வணிகர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மருந்து கட்டுப்பாட்டு துறையின் கட்டுப்பாட்டு மற்றும் உரிமம் வழங்கும் அதிகாரி ஆனந்த கிருஷ்ணன், மருந்து வணிகர்கள் காச நோய் மருந்துகளை விற்பனை செய்யும்போது, பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்கள் குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை