உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு அதிகாரிகளுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம்

அரசு அதிகாரிகளுக்கு நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம்

காரைக்கால்: மத்திய அரசு திட்டத்தில் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் போல செயல்படுவது கண்டனத்திற்குறியது என, நாஜிம் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நலத்திட்டங்களை சாமனிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், 'நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்' எனும் பாதயாத்திரை நிகழ்ச்சி கடந்த 4ம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர், அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இதனால் அரசு அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாமல் பல்வேறு பணிகள் பாதிக்கப்படுறது. இதனால் மக்களும் பாதிக்கின்றனர் என, நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்டுள்ள அறிக்கை;மத்திய அரசின் சாதனைகளை அவர்களே பிரகடனப்படுத்துவதற்கு 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற பெயரில் ஒட்டுமொத்த அரசாங்க நிர்வாகமும் முடங்கியுள்ளது. மேலும், மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் தலைமை செயலர் உட்பட அனைவரும் பா.ஜ., வின் நிர்வாகிகள் போல செயல்படுவது கண்டனத்துக்குறியது.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ