உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு நீட் பயிற்சி

வாக்காளர்களை கவர மாணவர்களுக்கு நீட் பயிற்சி

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் புதுச்சேரி நகர பகுதியில் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். அதையொட்டி மாணவர்களை கவர்ந்தால் அவர்கள் மூலம் அவரது குடும்ப ஓட்டுகளை கவர முடியும் என, கட்சியினர் பல்வேறு உத்திகளை கையாள துவங்கி உள்ளனர். அதில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம் மற்றும் தோள் பைகள், வாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்குவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் டியூஷன் கட்டணம் கட்டுவது என, படு தீவிரமாக செய்து வருகின்றனர். இதில் ஒரு படி மேலே சென்று ராஜ்பவன் மற்றும் உழவர்கரை தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளிக்கும் கோச்சிங் சென்டர்களை தற்காலிகமாக ஏற்பாடு செய்து மாணவர்களை சேர்த்து நீட் பயிற்சி அளித்து வருகின்றனர். சராசரியாக ஒரு மாணவர் நீட் பயிற்சிக்கு சென்றால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுக்க வேண்டும். தற்போது இலவசமாக நீட் பயிற்சி கிடைப்பதால் ஏராளமான மாணவர்கள் இதில் சேர்ந்து படித்து வருகின்றனர். இது மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு மாணவர்களின் பயிற்சிக்கு செல்கிறார்களா என, அக்கறையுடன் விசாரித்தும் வருகின்றனர் அரசியல் கட்சியினர். இந்த நீட் கோச்சிங் சென்டர் பயிற்சி முறையை தற்போது பல தொகுதிகளில் அரசியல் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை