உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இமாம்களுக்கு நிவாரணம் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

இமாம்களுக்கு நிவாரணம் நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள இமாம்களுக்கு நிவாரண உதவி வழங்க நேரு எம்.எல்.ஏ., முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.நோன்பு காலத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலில் பணிபுரியும் அனைத்து இமாம்களுக்கும் ரூ.10 ஆயிரம், பள்ளிவாசலில் பிலால் ஆக இருப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.அதனை புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பள்ளிவாசலில் பணிபுரியும் அனைத்து இமாம்களுக்கும், பிலால்களுக்கும் வழங்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., முதல்வர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, முதல்வர் புதுச்சேரியில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள் மற்றும் பிலால்களுக்கு அதே தொகைகளை வழங்குவதாக அவர், தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !