உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நேரு எம்.எல்.ஏ., மகன், மருமகள் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு

நேரு எம்.எல்.ஏ., மகன், மருமகள் மீது தாக்குதல்; போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு

புதுச்சேரி : நேரு எம்.எல்.ஏ., மகன், மருமகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால், பரபரப்பு நிலவியது.உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., நேரு. இவரது மகன் ரகு, 28, இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், வெளியில் சென்று விட்டு, பைக்கில் இளங்கோ நகரில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.அப்போது வாகனம் செல்ல முடியாத அளவில், திடீர் நகரை சேர்ந்த சக்திவேல் தனது டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி பேசி கொண்டிருந்தார். ஏன் வழியில் நிற்கிறீர்கள் என ரகு, கேட்டார். ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள், ரகுவை தாக்கினர். பின், சாந்தி நகர் வீட்டிற்கு சென்ற ரகு மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி காயத்திரியை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பி சென்றனர்.காயமடைந்த ரகு, காயத்திரி அரசு மருத்துவ மனையில், சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, உருளையன்பேட்டை போலீசார், விசாரணை நடத்தினர். இந்நிலையில், ரகுவை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் நேற்று காலை உருளையன்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.தொடர்ந்து, தன் மகன் மற்றும் மருகளை தாக்கியது மட்டும் இல்லாமல், தன் மீது மோசடியாக ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., புகார் அளித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக, திடீர் நகரை சேர்ந்த சக்திவேல் உட்பட 6 பேரை, உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை