நெல்லித்தோப்பு சென்டிமென்ட் அரசியல் கட்சியினர் கலக்கம்
புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒவ்வொரு சென்டிமென்ட் உள்ளது. இதில், பிரதான சென்டிமென்ட் சனி மூலை சென்டிமென்ட். புதுச்சேரி பிராந்தியத்தின் சனி மூலையில் அமைந்துள்ள காலாப்பட்டு தொகுதியில் இருந்தே அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை துவங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், இந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் இன்றுவரை உள்ளது. அதேபோல், நெல்லித்தோப்பு தொகுதியின் சென்டிமென்ட் தற்போது அனைத்து கட்சியினரையும் கலக்கமடையச் செய்துள்ளது.காரணம், இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் மீண்டும் வெற்றி பெற்றதில்லை என்பதே அந்த சென்டிமென்ட்.அதனால், வரும் தேர்தலில் என்ன நடக்குமோ என்ற அச்சம் போட்டியிட ஆயத்தமாகி வரும் அரசியல் கட்சியினருக்கும், அவரது ஆதரவாளர்களிடையே 'ஹாட் டாபி'க்காக பேசப்பட்டு வருகிறது.இந்த சென்டிமென்ட் நிலைக்குமா அல்லது மாற்றப்படுமா என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம்.