உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உணவக உரிமையாளரை தாக்கியவர்களுக்கு வலை

உணவக உரிமையாளரை தாக்கியவர்களுக்கு வலை

புதுச்சேரி: நடைபாதை உணவக உரிமையாளரை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவிந்த சாலையை சேர்ந்தவர் சண்முகம்,56; ராஜா தியேட்டர் சிக்னல் அருகே நடைபாதை உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 30ம் தேதி இரவு, கடைக்கு வந்த, குமரகுரு பள்ளத்தை சேர்ந்த, விக்கி மற்றும் அவரது நண்பர்கள், எதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வந்து இறங்கியுள்ள தகவலை ஏன் எனக்கு சொல்லவில்லை என, கேட்டார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விக்கி மற்றும் அவரது நண்பர்கள், சண்முகத்தை தாக்கினர். புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து, விக்கி அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ