உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூளை கட்டிக்கு துல்லிய அறுவை சிகிச்சை: நரம்பியல் நிபுணர் ரூபேஷ்குமார் தகவல்

மூளை கட்டிக்கு துல்லிய அறுவை சிகிச்சை: நரம்பியல் நிபுணர் ரூபேஷ்குமார் தகவல்

புதுச்சேரி,: புதுச்சேரி புனித குளுனி மருத்துவமனையில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த மருத்துவ கருத்தரங்கம் நடந்தது. திட்ட இயக்குநர் ரங்கநாத் வரவேற்றார். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி நரம்பியல் சிகிச்சை பிரிவு இயக்குநர் ரூபேஷ்குமார் பேசியதாவது: மூளையில் அறுவை சிகிச்சை என்பது சவாலானது. சிக்கலான இந்த அறுவை சிகிச்சையின்போது, சிறிது கவனம் சிதறினாலும், அதனுடைய விளைவு பெரிதாக இருக்கும். சில நேரங்களில் கண் பாதிப்பு, உறுப்புகள் செயல் இழப்பு ஏற்படும். ஆனால் இன்றைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையில் உலக அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மூளையில் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். அதற்கேற்ப நவீன கருவிகள் வந்துவிட்டன. மூளையில் கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு நான்கு நாட்கள் பிசியோதெரபி செய்துவிட்டு, ஆறாவது நாளில் வீட்டிற்கு போய் விடலாம். 6 வாரத்திற்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம். வழக்கம் போல் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். அந்த அளவிற்கு சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை நரம்பியல் வல்லுநர்கள், மயக்கவியல் டாக்டர்கள், கதிரியிக்க நிபுணர்கள் என, எல்லோரும் ஒரு குழுவாக இன்றைக்கு மூளையில் அறுவை சிகிச்சையை வெற்றிக்கரமாக மேற்கொண்டு மனித உயிர்களை காக்கின்றனர்' என்றார். சிறப்பு விருந்தினர் டாக்டர் ரூபேஷ்குமாருக்கு டாக்டர்கள் முத்தழகு, வனஜா வைத்தியநாதன், பங்காரம்மா, நீலாமணி, கபில்பாலிகா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரங்கநாத் செய்திருந்தார். கந்தசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை