உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை

புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி: குடும்ப பிரச்னையில் புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.வில்லியனுார் ராமநாதபுரம் மாஞ்சாலை தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் சோமசுந்தரம், 2, தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் கூடப்பாக்கத்தைச் சேர்ந்த ரத்திகா,19;, என்பவருடன் திருமணம் நடந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை ரத்திகா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சோமசுந்தரம் அன்று இரவு 1 மணியளவில் அவரது அறையில் மின்விசிறியில் வேட்டியால் துாக்கிட்டுக்கொண்டார். அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ