உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொண்டமாநத்தத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி: கவர்னர் திறந்து வைப்பு

தொண்டமாநத்தத்தில் புதிய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி: கவர்னர் திறந்து வைப்பு

வில்லியனுார் : தொண்டமாநத்தம் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கத் தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்ட பணிகளை கவர்னர் துவக்கிவைத்தார்.தொண்டமாநத்தம் கிராமத்தில் பொதுப் பணித்துறை சார்பில் ரூ.2.55 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியு டன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு அதன் துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு முதலமைச் சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய்சரவணன்குமார் முன்னிலை வகித்தனர். கவர்னர் கைலாஷ்நாதன் புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், பொது சுகாதாரக் கோட்ட செயற் பொறியளார் உமபதி, குடிநீர்திட்ட உதவிப் பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர்கள் சுதர்சனன், திருவேங்கடம்.பா.ஜ., நிர்வாகிகள் ஊசுடு ஜெயக்குமார், சாய் தியாகராஜன், தமிழரசன் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் தாமோதிரன், சக்திமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி