உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காமராஜர் நகர் தொகுதியில் காங்., சார்பில் புத்தாண்டு பரிசு

 காமராஜர் நகர் தொகுதியில் காங்., சார்பில் புத்தாண்டு பரிசு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் புத்தாண்டு பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார். காமராஜர் அறக்கட்டளை சார்பில், காமராஜர் நகர் தொகுதியில் புத்தாண்டு பரிசு பொருட்கள் மற்றும் காலண்டர் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கும் பணி துவங்கியது. முதற்கட்டமாக காமராஜர் தொகுதி சாமிபிள்ளைத்தோட்டம் வார்டுக்குட்பட்ட லெனின் நகர் பகுதி மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளரும், காங்., சீனியர் துணை தலைவருமான தேவதாஸ் முன்னிலை வகித்தார். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பரிசு தொகுப்பினை தொகுதி மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொகுதி தேர்தல் தலைமை பொருப்பாளர் வழக்கறிஞர் மருதுபாண்டியன், பொருப்பாளர்கள் தியாகராஜன், பரணிதரன், வட்டார காங்., தலைவர் பார்த்திபன் மற்றும் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை