உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆதரவு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆதரவு

புதுச்சேரி: சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என,காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்தார்.அவர், கூறியதாவது;சபாநாயகர் செல்வம் மீது சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையைகூட்டி விவாதம் நடத்த வேண்டும்.பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ. 642 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.தமிழகத்திற்கு முந்தைய பேரிடர் இழப்புக்கான பாக்கி தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.வெள்ள பாதிப்பு நிவாரணம் கேட்க, புதுச்சேரி எம்.பி.,க்களை அரசு பயன்படுத்தி கொள்ளவில்லை.பேரிடர் மீட்பு நிவாரணம் குறித்து விவாதம் செய்ய சட்டசபை கூட்டிதீர்மானம் நிறைவேற்றி கவர்னர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பலாம்.சபாநாயகர் தலைமை தாங்கி, எங்கெங்கோ எம்.எல்.ஏ.,க்களை டூர் அழைத்து செல்கிறார். அதுபோல் வெள்ள நிவாரணம் கேட்க டில்லி செல்லாம்.மத்திய குழு வந்து சென்ற பின்பு,சபாநாயகர் 3 முறை டில்லி சென்று வந்தும்,மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் கேட்கவில்லை.சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கொடுத்தசபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும்.சபாநாயகர் செல்வம் அரசியல் நடவடிக்கையில் ஈடுப்படுவது தவறு. தான் சட்ட ரீதியாக சரியாக நடந்து கொள்கிறேன் என்பதை சட்டசபையில் சபாநாயகர் சொல்ல வேண்டும்' என்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ