உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வடகிழக்கு மாநில கலாசார விழா

வடகிழக்கு மாநில கலாசார விழா

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக வடகிழக்கு மாநில மாணவர் கூட்டமைப்பின் சார்பில், வடகிழக்கு மாநில கலாசார விழா 2025 நடந்தது.பல்கலைக் கழக கருத்தரங்கம் கலாசார மையத்தில் நடந்த விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்களின் கலாசார வரலாற்று அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.விழாவிற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் (பொ) தரணிக்கரசு தலைமை தாங்கினார். வடகிழக்கு மாநில மாணவர் கூட்டமைப்பின் தலைவர் தர்ஷனி, பேராசிரியர்கள், மற்றும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வடகிழக்கு மாநிலங்களின் கலை கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை