என்.ஆர்.காங்., நிர்வாகி நியமனம்
புதுச்சேரி: என்.ஆர்.காங்., விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட் டுள்ளார்.புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்., கட்சியில் பல்வேறு அணி நிர்வாகிகள், என்.ஆர்.காங்., தலைவரும், முதல்வருமான ரங்கசாமி ஒப்புதலுடன் மாநில செயலாளர் ஜெயபால் மூலம் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி, என்.ஆர்.காங்., விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.