உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடு ரத்து ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடு ரத்து ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி: என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:பஞ்சாப் மாநில மருத்துவக் கல்லுாரிகளில், என்.ஆர்.ஐ.,க்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அம்மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் என்.ஆர்.ஐ.,களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உடனே நிறுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி, மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு என்பது மர்மமாகவே உள்ளது. இதனால், புதுச்சேரி மாணவர்களின் உரிமை ஆண்டுதோறும் பறிபோகிறது. எனவே, சென்டாக் இட ஒதுக்கீட்டில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டை ரத்து செய்து அந்த இடங்களை, குறிப்பாக அரசு மருத்துவக்கல்லுாரிகளில் உள்ள 27 இடங்களையாவது புதுச்சேரி மாணவர்களுக்கு பெற்றுத்தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி