உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு செவிலிய அலுவலர் சங்கம் மற்றும் புதுச்சேரி செவிலியர்கள் சங்கம் சார்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு போராட்டம் இன்று (நவ.,25) நடந்தது. செவிலியர்கள் பிரிவில் உள்ள அனைத்து காலிபணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். செவிலிய படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை விலியுறுத்தி இன்று காலை 8:00 முதல் 10:00 மணி வரை இரண்டு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நடந்த போராட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் செல்வி, விஜயலட்சுமி, வள்ளியம்மை, திலகவதி, கிஸ்டினா சங்கீதா, பாலமுருகன் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், பொது செயலாளர் முனுசாமி, துணை பொது செயலாளர் மணிவண்ணன், புதுச்சேரி செவிலியர்கள் நல சங்க கவுரவ தலைவர் கோவிந்தராஜன், கவுர செயலாளர் ஜானகி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என, நான்கு பிராந்தியங்களிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி