மேலும் செய்திகள்
தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
10 hour(s) ago
அரசுப் பள்ளிகளில் முப்பெரும் விழா
10 hour(s) ago
ரூ.2 கோடியில் மேம்பாட்டு பணி: அமைச்சர் துவக்கி வைப்பு
10 hour(s) ago
புதுச்சேரி : உடல் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்ற செவிலியர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.பாக்கமுடையான்பட்டு ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் ஞானசுந்தரம் மனைவி காந்திமதி, 55; திண்டிவனம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.நேற்று முன்தினம் உடல் பரிசோதனைக்காக கணவருடன் சென்னைக்கு ஆம்புலன்சில் சென்றார். இ.சி.ஆரில் கொட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், காந்திமதி ஏற்கனவே, இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago