மேலும் செய்திகள்
நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கல்
30-Dec-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சமூக சேவகரும், என்.ஆர்.காங்., சிறப்பு அழைப்பாளருமான நந்தா ஜெயஸ்ரீதரன் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த காசநோயாளிகளுக்கு தனது சொந்த செலவில் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கினார். நிகழ்ச்சியில், லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த மருத்துவ அதிகாரி பத்மினி, மருத்துவர் யுவராஜ்,துணை செவிலியர் மேற்பார்வையாளர் ராதாமுத்து மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் பாஸ்கரன், துணை செவிலியர் மீரா ஆகியோர் செய்திருந்தனர்.
30-Dec-2025