மேலும் செய்திகள்
புயல் மழையின்போது மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
04-Dec-2024
புதுச்சேரி : அரவிந்தர் ஆசிரமம் வந்த ஒடிசா மாநில மாற்றுத்திறனாளி சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஒடிசா, மகாஜன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 25ம் தேதி புதுச்சேரி வந்தார். அரவிந்தர் ஆசிரமம் விருந்தினர் அறையில் தங்கினர். நேற்று காலை 7:00 மணிக்கு வெங்கடேஸ்வர் மகள் மாற்றுத்திறனாளி சோனாக் ஷி லெங்கா, 15; லேசான உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சோனாக் ஷி லெங்கா உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
04-Dec-2024