மேலும் செய்திகள்
அரசு மானிய திட்டத்தில் விவசாய கருவிகள் வழங்கல்
12-Aug-2025
புதுச்சேரி; தெரு நாய்களை பிடிப்பது குறித்து உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், நகராட்சியில் 3 இடத்திலும், கொம்யூன் பஞ்சாயத்தில் 1 இடம் தேர்வு செய்து, தெரு நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்வது, அனுமதியில்லாமல், வளர்க்கப்படும் நாய்களை வளர்ப்போர் மீது அபராதம் விதித்து, நடவடிக்கை எடுப்பது, பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு தருவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவது, நகர மற்றும் கிராம பகுதியில் தெரு நாய்களை பெருக்கத்தை தடுக்க நகராட்சி மற்றும் கால்நடைத்துறை மூலம் குழுக்கள் அமைத்து கருத்தடை செய்வது பற்றி ஆலோனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், துணை இயக்குநர் சவுந்திரராஜன், நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், நலவழித்துறை துணை இயக்குநர் ரகுநாதன், திட்ட அலுவலர் குனேஸ்வரி, ராஜிவ்காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லுாரி டீன் முருகவேல், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை இணை இயக்குநர் ராஜிவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Aug-2025