உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் ஆயில் கொட்டியதால் இ.சி.ஆரில் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் ஆயில் கொட்டியதால் இ.சி.ஆரில் போக்குவரத்து பாதிப்பு

கோட்டக்குப்பம்: இ.சி.ஆரில் சென்ற போர்வெல் வாகனத்தில் இருந்து ஆயில் கொட்டியதால், கோட்டக்குப்பம் பகுதியில் போக்குவரத்து பாதித்தது.புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை போர்வெல் வாகனம் ஒன்று, இ.சி.ஆர். வழியாக மரக்காணம் நோக்கிச் சென்றது. கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகே சென்றபோது அந்த வாகனத்தின் இன்ஜின் இருந்து ஆயில், சாலையில் கொட்டியது.இதனால் கோட்டக்குப்பம் முதல் பெரிய முதலியார்சாவடி வரை சாலை முழுதும் ஆயில் கழிவு படர்ந்தது. அப்போது, இ.சி.ஆரில் சென்ற சில இரு சக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து பாதிக்கப்பட்டனர்.தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, சாலையில் கொட்டிய ஆயில் மீது, மணலைக் கொட்டி சுத்தம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ