உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

புதுச்சேரி : தீராத வயிற்று வலியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் பேட் நடுத் தெருவைச் சேர்ந்தவர் கோபால், 62; கூலித்தொழிலாளி. இவர் கடந்த மூன்று மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று மதியம் அவரது அறையில் வேட்டியால் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி