மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
25-Aug-2025
புதுச்சேரி : புதுச்சேரி அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்து மனு கொடுத்தார். மனுவின் விவரம்: நெல்லிதோப்பு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தரமற்ற குடிநீர் வழங்கப் பட்டு வருவதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன், அமைக்கப்பட்ட குடிநீர் குழாயை மாற்றாத தால், சக்தி நகர் பகுதியில் மாசுபட்ட குடிநீரை பருகிய பொதுமக்கள் பாதிப்பை சந்தித்தனர். நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட குயவர்பாளையம், பிள்ளை தோட்டம், சக்தி நகர், அணணா நகர், டி.ஆர்.நகர், வேல்முருகன் நகர், சத்யா நகர், நெல்லித்தோப்பு வெண்ணிலா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தரம் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது. எனவே, போர்கால அடிப்படையில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய்களை அமைக்க வேண்டும். நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீரை ஆய்வு செய்து தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
25-Aug-2025