மேலும் செய்திகள்
அரசு பள்ளியை காணவில்லை அரசை கண்டித்து பேனர்
17-Oct-2025
புதுச்சேரி: அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்து, சிறுப்பு கூறு நிதியை முழுமையாக செலவிட கோரிக்கை மனு அளித்தார். மனுவில், 'தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற துவங்கப்பட்ட சிறப்பு கூறு நிதி திட்டம் புதுச்சேரியில் முறையாக பயன்படுத்தவில்லை. சிறப்பு கூறு நிதி இதுவரை 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள நிதியை விரைந்து செலவிடுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும். நெல்லித்தோப்பு தொகுதி, பெரியார் நகர், 10வது தெருவில் இடிந்து விழுந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய சமுதாய நலக் கட்டடம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அமைக்கப்பட்டு எரியாமல் உள்ள ைஹமாஸ் விளக்குகளை உடனே சரிசெய்ய வேண்டும். இந்த பிரச்னைகளை நலத்துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சந்திப்பின் போது, நிர்வாகிகள் செல்வராஜ், சுப்ரமணியன், வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சேகர், சக்திவேல், முனியன், ரமேஷ், விஷ்ணு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
17-Oct-2025