உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்சோவில் ஒருவர் கைது

போக்சோவில் ஒருவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். காரைக்கால், நிரவி, காக்கமொழி, காந்தி நகரை சேர்ந்தவர் பாண்டியன், 46. இவர், ஆறாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து நிரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், நிரவி சப் இன்ஸ்பெக்டர் குமரன், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தார்.அவரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை