உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைனில் ரூ.17.50 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

ஆன்லைனில் ரூ.17.50 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

புதுச்சேரி : ஆன்லைனில், ரூ.17.50 லட்சம் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஆனந்த ராமகிருஷ்ணன். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு, வீட்டில் இருந்தே வேலை செய்வது தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. அவர் அதை நம்பி, 'ஆன்லைனில்' தனது டேட்டாவை பதிவு செய்தார்.இந்த நிலையில், 'டாஸ்க்' விளையாடி சிறிய அளவிலான தொகையை பெற்றார். தொடர்ந்து பெரிய அளவில் வருமானம் ஈட்ட, ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் முதலீடு செய்து 'டாஸ்க்' விளையாடினார்.ஆனால் அதன் பிறகு அவரது 'ஆன்லைன்' இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.அதேபோல் காரைக்கால், நிரவியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவருக்குமர்ம நபர்கள், போன் செய்து'உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளது. போதைப் பொருட்களை கடத்துகிறீர்களா' என கேள்வி கேட்டு மிரட்டினர்.மேலும் மும்பையில் இருந்து போலீஸ் பேசுவதாக கூறி, அந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் என்றனர். அதனை நம்பிய ரவிச்சந்திரன் அவர்கள் கேட்ட, ரூ.15 லட்சத்தை ஆன்லைனில், அனுப்பினார்.இந்த பணத்தை அனுப்பிய உடனே அவருடனான இணைப்பை மர்ம நபர்கள், துண்டித்தனர்.இதேபோல, புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர், ரூ.30 ஆயிரம் இழந்தார். புதுச்சேரி ஜீவானந்தபுரம் மோகன்தாஸ், ஆன்லைனில் 'குடிநீர்' பாட்டில் ஆர்டர் செய்து, ரூ.95 ஆயிரத்தை இழந்தார்.பிரவீன் என்பவர், 'ஜிபே' மூலம் பணம் அனுப்பி, ரூ.50 ஆயிரம் பறிகொடுத்தார். பியாஷ் என்பவர் 'பப்ஜி கேம்' விளையாட ரூ.4 ஆயிரம் பணம் செலுத்தி ஏமாந்தார்.இதுகுறித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை