உள்ளூர் செய்திகள்

வெட்டவெளி தியானம்

புதுச்சேரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஓங்கார ஆசிரமம் சார்பில், கடற்கரை சாலையில், நாளை 12ம் தேதி வெட்டவெளி தியானம் நடக்கிறது.புதுச்சேரி, ஓங்கார ஆசிரமம் சார்பில், ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று, வெட்டவெளி தியானம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நாளை 12ம் தேதி, புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடலில், மாலை 6:00 மணிக்கு வெட்டவெளி தியானம் நடக்கிறது.ஓங்கார ஆசிரம மடாதிபதி சுவாமி ஓங்கார நந்தா, தியானத்தை துவங்கி வைக்கிறார்.இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, தியானம் வழிமுறைகள் குறித்து சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ