உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போத்தீஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு

 போத்தீஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு விழா நடந்தது. கிறிஸ்துமஸ் முன்னிட்டு, புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில் குடில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவில், புதுச்சேரி, கடலுார் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் காலிஸ்ட், பாதிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி மறைமாவட்ட நிதி நிர்வாகி பிலோமிண்டோஸ், மூலகுளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், செயலாளர் பிரேம் குமார், பாதிரியார் மெல்கிசெடெக் ஆகியோர் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில் போத்தீஸ் உழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை போத்தீஸ் நிறுவன பொது மேலாளர் பாலமுருகன், மனிதவள மேலாளர் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை