மேலும் செய்திகள்
தட்சிண கன்னடாவின் தலைசிறந்த கடற்கரைகள்
04-Sep-2025
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரை சாலையில் 92.7 பிக் எப்.எம்.,ன் 'நம்ம ஊரு நம்ம கெத்து' என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் திருவிழா வரும் 3ம் தேதி நடக்கிறது. புதுச்சேரியை பசுமையாகவும், சுத்தமாகவும் மாற்றி அமைக்கும் பொருட்டு, 92.7 பிக் எப்.எம்.,ன் 'நம்ம ஊரு நம்ம கெத்து' என்ற தலைப்பில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, நம்ம ஊரு நம்ம கெத்து, தலைப்பில் வரும் 3ம் தேதி, கடற்கரை சாலை, காந்தி திடலில் சுற்றுச்சூழல் திருவிழா நடத்த திட்ட மிட்டுள்ளனர். அதன் முதல் நிகழ்வை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் லக்ஷ்மிநாராயணன் கலந்துகொள்கிறார். இந்த திருவிழாவில், சுற்றுப்புற சூழலை பாதிக்காத பொருட்களின் சந்தை, இசை, போட்டிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சூப்பர் சீங்கர் கிழக்குவாசி சந்திரனின் தனிநபர் இசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, பல சாலைகளை அழகுபடுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் கழிவறைகளை புதுப்பித்து கொடுக்கவும், பொது இடங்களில் உள்ள சுவர்களில் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம், வூக்கி நிறுவனம் மற்றும் கோல்ட் பிரியம் ரிபெண்ட் ஆயில் நிறுவனம் இணைந்து வழங்குகின்றன.
04-Sep-2025