மேலும் செய்திகள்
ஜிப்மரில் நாளை புற நோயாளிகள் பிரிவு இயங்காது
03-Mar-2026
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், ஏப்ரல் 3ம் தேதி புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; மத்திய அரசு விடுமுறை தினமான 03.04.2026 (வெள்ளிக்கிழமை) அன்று “புனித வெள்ளி” முன்னிட்டு ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
03-Mar-2026