உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்

 சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம்

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில், கரிக்கலாம்பாக்கம் வேளாண் அலுவலகத்திற்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் சிப்பி காளான் வளர்ப்பு செயல் விளக்கம் நடந்தது. வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் கல்லுாரி டீன் முகமத் யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ் கெலுஸ்கர், திட்ட அலுவலர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கணேஷ் ராம், கிரிகரன், ஞான பிரசாத், கோகுல் அழகன், கோகுல்நாத் , கவுதமன், ஹரிஹரன், ஹரி சுதன், அயனீஸ்வரன், ஜீவன்குமார் ஆகியோர், உணவு காளான் எவ்வாறு தயாரிப்பது, பதப்படுத்துவது, மதிப்பு கூட்டுவது குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ