உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மரப்பாலம் மின்துறை அலுவலகத்திற்கு லைசன்ஸ் கான்ட்ராக்டரை நியமிக்க கோரிக்கை

மரப்பாலம் மின்துறை அலுவலகத்திற்கு லைசன்ஸ் கான்ட்ராக்டரை நியமிக்க கோரிக்கை

புதுச்சேரி : மரப்பாலம் மின் துறை அலுவலகத்தில் லைசன்ஸ் கான்ட்ராக்டரை நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து இயக்க தலைவர் ஜெகநாதன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: மின்துறை தெற்கு, வடக்கு (கிராமம்) மரப்பாலம் மின் துறை அலுவலகத்தில் லைசன்ஸ் கான்ட்ராக்டர் இல்லாத நிலை உள்ளது. இதனால் வீடு, தொழிற்சாலை, விவசாயம், வணிக நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒயரிங் சோதனை சான்று, கண்காணிப்பு தரச் சான்று பெற முடியவில்லை. கடந்த 1995ம் ஆண்டிற்கு பின் கான்ட்ராக்டர்களுக்கு தேர்வு நடத்தாததால், ஒப்பந்ததாரர் இல்லாத நிலை உள்ளது. எனவே மின்துறை அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்ய வேண்டும். மின்துறை தெற்கு, வடக்கு இயக்குதலும், பராமரித்தல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மேலும், கிராம பகுதியிலுள்ள மக்கள் மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு உரிய பணத்தை செலுத்துவதற்கு வருவாய் பிரிவு-3க்கு வர வேண்டியுள்ளது. இந்த வருவாய் பிரிவானது மின் துறை தலைமை அலுவலகத்தில் உள்ளதால் கிராம பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பிரிவை மரப்பாலம் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை