பங்குனி உத்திர தேர் திருவிழா
வில்லியனுார்: வில்லியனுார் வள்ளிதேவ சேனா சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று நடந்தது.வில்லியனுார், சுந்தரமூர்த்தி வினாயகபுரம் மேற்கே உள்ள வள்ளிதேவசேனா சிவசுப்ரமணிய கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 2ம் தேதி கொடியேற்றப்பட்டது. தினசரி காலை சிறப்பு அபிேஷகம், மாலை சுவாமி வீதியுலா, நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் அறங்காவலர் குழு நிர்வாகிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். கோவில் வளாகத்தில் இருந்து துவங்கி மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் கோவிலை வந்தடைந்தது.இன்று காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 7:00 மணிக்கு மேல் சுவாமி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி இரவு ஊஞ்சல் உற்சவம், 13ம் தேதி காலை விடையாற்றி உற்சவம், 108 சங்காபிேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணிய குருக்கள் தலைமையில் உற்சவதார்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.