உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பால் பொருட்களை வாங்க பாண்லே அழைப்பு

பால் பொருட்களை வாங்க பாண்லே அழைப்பு

பாண்லே நிறுவனம், புதுச்சேரியில் துவங்கப்பட்ட முதல் கூட்டுறவு சங்கம். இது 101 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை கொண்டுள்ளது.இந்தநிறுவனம், புதுச்சேரி மக்களுக்கு, 68 ஆண்டுகளுக்கும் மேலாக தரமும், சுவையும் நிறைந்த பாலை, குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.இந்தியாவிலேயே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதிக கொள்முதல் விலை வழங்கும் மற்றும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பால் விற்பனை செய்யும் நிறுவனம் பாண்லே என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிறுவனம்,பால் மட்டுமின்றி மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் சுவை மிகுந்த பால் பொருட்களான குல்பி, பால்கோவா, நெய், தயிர், மோர், லெஸ்ஸி, நறுமணப்பால், ஐஸ்கிரீம்களையும் உற்பத்தி செய்து, பார்லர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு, சிறப்பு ஆர்டரின் பெயரில் தள்ளுபடி விலையிலும், விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை பாண்லேவின் சுவை மிகு பால் பொருட்கள் பெரிதும் கவர்ந்துள்ளது.இந்தநிறுவனம், புதுச்சேரி மாநிலத்தின் கூட்டுறவின் முகமாக திகழ்ந்து வருகிறது.கூட்டுறவு சித்தாந்தம் மேம்படவும், பாண்லே நிறுவனம் தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நற்பணியாற்றிட வாடிக்கையாளர்களின் பேராதரவு இன்றியமையாததாகிறது.அதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பாண்லே பால் பொருட்களை அதிகளவில் வாங்கி பயன் பெற்று, கூட்டுறவு நிறுவனமான பாண்லே நிறுவனம் தனது வளர்ச்சி பாதையில், ஒரு புதிய மைல் கல்லை எட்டிட பேராதரவினை தொடர்ந்து நல்க வேண்டும் என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை