உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

காரைக்கால் : காரைக்காலில் சிறார்களுக்கு வாகனம் ஒட்ட அனுமதி அளித்த மூன்று பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குற்றவியல் நீதிபதி உத்தரவு.காரைக்கால் மாவட்டத் தில் நகர போக்குவரத்து போலீசார் கடந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் சிறுவர்கள் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனவர்.இந்த வழக்கு காரைக்கால் குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி அப்துல்கனி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் வழக்குகளின் குற்றவாளிகளான (சிறார்களின் பெற்றோர்கள்) காரைக்காலை சேர்ந்த காதர் சுல்தான், வாசுகி மற்றும் கலைமதி ஆகியோர்களுக்கு தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இனி வரும் காலங்களில் இதேபோல் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களின் வாகனத்தின் உரிமம் ஒரு வருடம் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வாகனத்தின் உரிமையாளர், பொறுப்பாளர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை