உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூடப்பட்ட பள்ளியை திறக்க பெற்றோர் கோரிக்கை

மூடப்பட்ட பள்ளியை திறக்க பெற்றோர் கோரிக்கை

அரியாங்குப்பம்: சிறுமி பாலியல் விவகாரத்தால், மூடப்பட்ட பள்ளியை திறக்க வேண்டும் என,பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தவளக்குப்பம், செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில்,படித்த சிறுமிக்கு, ஆசிரியர் மணிகண்டன், பாலியல் தொல்லை கொடுத்தாக, அச்சிறுமியின் பெற்றோருடன், பொதுமக்கள், கடந்த 14ம் தேதி, பள்ளியில் புகுந்து சூறையாடினர்.பொதுமக்கள், தவளக்குப்பம் சந்திப்பில், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.ஆசிரியர் மணிகண்டனை, தவளக்குப்பம் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.பள்ளியை மாவட்ட நிர்வாகம் மூட உத்தரவிட்டது. இந்நிலையில், பள்ளியில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த மாணவர்கள் அனைவரையும், அரியாங்குப்பம், இமாகுலேட் தனியார் பள்ளியில், செய்முறை தேர்வை எழுத, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கு மாணவர்கள் தேர்வு எழுதினர். அதே, பள்ளியில், தேர்வு மையம் என்பதால், அடுத்த மாதம் நடைபெறும் பொதுத் தேர்வையும் மாணவர்கள் எழுத இருக்கின்றனர்.இந்நிலையில், மூடப்பட்ட பள்ளியை திறக்க வேண்டும். பள்ளியில் படித்து வரும், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும். உள்ளிட்டவை குறித்து, பள்ளி தாளாளரிடம், மாணவர்களின் பெற்றோர்கள், வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை