போலி சான்றிதழ் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவை பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
புதுச்சேரி : போலி ஆவணங்கள் மூலம், என்.ஆர்.ஐ., மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் இடைதரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்து, மாணவர்கள், பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த 2024-25ம் ஆண்டுக்கான, சென்டாக் மூலம், போலி ஆவணங்கள் வைத்து, என்.ஆர்.ஐ., மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 5 ஆண்டுகளில், சென்டாக் நிர்வாகம், கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் வெளிநாட்டு துாதரக சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று, போலி வெளிநாட்டு துாதரக சான்றிதழை கொண்டு, புதுச்சேரி மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் உள்ள கல்லுாரியில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக, சி.பி.ஐ., உளவுத்துறை உள்ளிட்ட புலனாய்வுத்துறையினர் சோதனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.