மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டல் 4 வாலிபர்கள் கைது
3 hour(s) ago
பீகார் தேர்தலில் வெற்றி: பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கல்
3 hour(s) ago
புகையிலை விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
புதுச்சேரி: காங்., உடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் மூழ்கி கொண்டு வருகின்றன என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். அவர், கூறியதாவது: பீகார் சட்டசபை தேர்தலில் காங்., கட்சியின் ஓட்டுத்திருட்டு உள்ளிட்ட பொய் பிரசாரங்களை மக்கள் நம்பாமல், பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற செய்துள்ளனர். காங்., கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் அனைத்தும் தற்போது மூழ்கி வருகின்றன. அதேபோல், தி.மு.க.,வும் மூழ்கும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதுச்சேரியில் அளித்த வாக்குறுதிகளில் 95 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த காங்., ஆட்சியில், மாநிலம் 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.,க்களையும் ரோட்டில் அமர வைத்த பெருமை முன்னாள் முதல்வர் நாராயணசாமியை சேரும். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அவர், தெரிவித்துள்ளர். நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன்; பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றேன். அனைத்திற்கும் வருமான வரி செலுத்தி வருகிறேன். அவர் பாகூரில் பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அது எப்படி வந்தது, அவர் என்ன தொழில் செய்து வருகிறார் என்பதை தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதல்வரின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன்' என்றார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago