பஞ்சவடீயில் பவித்ரோத்சவம்
புதுச்சேரி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 20ம் தேதி துவங்கி, 24ம் தேதி வரை திருபவித்ரோத்சவம் நடக்கிறது.வரும் 20ம் தேதி மாலை 6:00 மணிக்கு பூர்வாங்க பூஜையுடன் விழா துவங்கி, தினசரி ேஹாமங்களை தொடர்ந்து, பவித்ர மாலை சாற்றுதல், திருவாராதனம் சாற்றுமுறைகள் நடக்கிறது.இறுதிநாளான 24ம் தேதி காலை 7:00 மணிக்கு புண்யாஹாவாசனம், நித்ய ேஹாமம், ப்ரதான ேஹாமம், மகாசாந்தி ேஹாமம், பூர்ணாஹூதி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது.யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கடப்ரோக்ஷணம், பவித்ர மாலைகள் களைதல், சிறப்பு திருவாராதனம் சாற்றுமுறை நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.