உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடுத்தடுத்து பிரதான சாலைகளில் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்

அடுத்தடுத்து பிரதான சாலைகளில் திடீர் பள்ளங்களால் மக்கள் அச்சம்

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதி - தியாகராஜா வீதி சந்திப்பு பெருமாள் கோவில் அருகே சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டது.புதுச்சேரி, காந்தி வீதி நகரப் பகுதியின் முக்கிய பிரதான சாலையாக திகழ்ந்து வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், தியாகராஜா வீதி சந்திப்பு பெருமாள் கோவில் எதிரே 4 அடி அகலத்திற்கு, பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கி திடீரென பள்ளம் ஏற்பட்டது.இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், பள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அதனை சரி செய்வதற்காக பணிகளில் ஈடுபட்டனர். இதேபோல், நேற்று முன்தினம் வள்ளலார் சாலை 45 அடி ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக 12 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது.தொடர்ந்து, நகரப்பகுதியின் முக்கிய சாலைகளின் நடுவே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்படுவதற்காக காரணங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து, அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை